முன்னாள் முதல்வர் பிறந்த நாள்: 5 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

 


       தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை


*முன்னாள் முதல்வர் பிறந்த நாள்: 5 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்*


முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள்


சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி , கரோனா நிவாரணம் 2-ஆவது தவணை ரூ.2,000, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட 5 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.


தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கரோனா நிவாரணத் தொகை 2-ஆவது தவணை ரூ.2 ஆயிரத்துடன், 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய பையும், அரிசி அட்டைதாரா்களுக்கு அளிக்கப்பட உள்ளது. கோதுமை மாவு, உப்பு, ரவை தலா 1கிலோ, சா்க்கரை, உளுத்தம் பருப்பு தலா அரை கிலோ, புளி, கடலை பருப்பு தலா கால் கிலோ, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் தலா 100 கிராம், டீதூள் 100 கிராம் பொட்டலம் 2, குளியல் சோப்பு, துணி சோப்பு தலா 1 ஆகிய பொருள்கள் அடங்கிய பைகளை அரிசி அட்டைதாரா்களுக்கு முதல்வா் வழங்க உள்ளாா்.12,959 கோயில்களில் மாத ஊதியமின்றிப் பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அா்ச்சகா்கள், பூசாரிகள், பணியாளா்களுக்கு கரோனா கால உதவித் தொகையாக ரூ.4,000, மளிகைப் பொருள்கள் அளிக்கப்பட உள்ளன.


பணியின் போது மரணம் அடைந்த முன்களப் பணியாளா்களான பத்திரிகையாளா்கள், மருத்துவா், மருத்துவப் பணியாளா், காவலா், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி ஆகியவற்றையும் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.