இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி

 


18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று முதல் தொடக்கம்.

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கி வந்த நிலையில்,18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாநில அரசுகள் நிதி செலுத்தி தடுப்பூசியை வாங்கி வந்தன.

இதற்கிடையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அந்த உரையில், மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவு செய்ய தேவையில்லை. ஏனெனில்,ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு வழங்கவுள்ளது.

எனவே,இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை, மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி,18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் இலவச தடுப்பூசி வழங்கப்படும்.

மேலும்,இணையதள முன்பதிவு இல்லாமல் நேரில் சென்று தடுப்பூசி போடும் நடைமுறையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது