இரு வரி செய்திகள்

 

 

 திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா அவர்களின் துணைவியார் சிகிச்சை பலனின்றி காலமானார்

 

 ஆ.ராசா அவர்களின் உயர்விலும் - தாழ்விலும், நெருக்கடிகளிலும் - சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி


முதல்வர் ஸ்டாலின் இரங்கல்😡மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் காலமானார்


 தர்மபுரி மாவட்டம்  வாச்சாத்தி சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதிக்காக குரல் கொடுத்தவர்களில் ஒருவர்


😡கொரோனா: 'அதிக மருத்துவ கட்டணம்; இலவச சேவைக்கு லஞ்சம்..!’- எச்சரிக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு!


😡திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் கறி விற்பனை செய்த பிரபல கறிக்கடைக்கு நகர் தெற்கு காவல்துறையின் பரிந்துரையின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ரூ.3000 அபராதம் விதித்தனர்.


😡தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர விடுதிகளுடன் சேர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தக் கூடாது: மத்திய அரசு உத்தரவு..


😡பிரதமர் மோடியின் கால் தொட்டு வணங்கவும் தயார்... தலைமைச் செயலாளரை மாற்றும் உத்தரவை ரத்து செய்ய மம்தா வலியுறுத்தல்


😡தமிழகத்தில் இதுவரை 87,96,133  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது


- சுகாதாரத்துறை அமைச்சகம்😢😡சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி, பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் வாக்குமூலம்!😡பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் H. ஜெயலட்சுமி( 944477 2222) இந்த எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் புகார் கொடுப்பவர்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும்.


                  நிருபர் கார்த்தி