தமிழக முதலமைச்சராக பதவியேற்றதற்கு திருப்பதி தேவஸ்தானத்தின் பிரசாதத்தை தந்து வாழ்த்து தெரிவித்த டாலர் ஷேஷாத்ரி ஸ்வாமி
ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ள உள்ள சவால்கள் குறித்து தொழிற்துறையினர், வணிகர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
தமிழகத்தில் மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது - மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
ஆளும்கட்சிக்கு ஆலோசனை வழங்க தயார், தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டோம்
சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள்
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்றார்கள்; தற்போது தாமரை மலர்ந்துள்ளது
- தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு!!!
சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
- மருத்துவமனை டீன்
நாளை முதல் துவங்கும் முழு ஊரடங்கானது சென்ற காலங்களில் விதித்த ஊரடங்கை விட சிறிய அளவில் மாறானது, எனவே பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்.
சமூக வளைத்தலங்களில் பரவி வரும் ஊரடங்கு சம்பந்தமான காவல்துறை அதிகாரிகளின் பழைய உத்தரவு விடியோ, ஆடியோக்களை நம்ப வேண்டாம்.
தமிழ்நாடு காவல்துறை
ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்
ஊரடங்கு விதி மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது, கைப்பற்றினால்
சிறிதுநேரத்தில் விடுவிக்கவேண்டும்
டிஜிபி திரிபாதி
முழு ஊரடங்கில் பொதுமக்களிடம் காவல்துறை கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
எந்த ஒரு சூழலிலும் பொதுமக்களிடம் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக் கூடாது.
- காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல்
கடந்த ஆண்டு கொரோனா நோயாளிகளுக்காக ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தேன். அதேபோல் இந்த ஆண்டும் ஆண்டாள் அழகர் கல்லூரியை வழங்குவதோடு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் - விஜயகாந்த்
சிறைகளில் கொரோனா பரவி வருவதால் சிறிய வழக்குகளில் அவசியமின்றி யாரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டாம்.
கடந்த வருடம் பரோல் வழங்கிய கைதிகளுக்கு மேலும் 90 நாட்கள் பரோலில் செல்ல பரிசீலிக்கலாம்.
- உச்சநீதிமன்றம்