ஒரு வரிச் செய்திகள்

 


          ஒரு  வரி செய்திகள் !! 


👉 மே 11-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


👉 தமிழக அரசின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் முறையாக பின்பற்றி மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


👉 அண்ணா  }நூலகத்துக்குப் புத்துணர்வு தரும் விதமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


👉 டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக காவல்துறை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.


👉 இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அமெரிக்கா எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும், தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலை இதயத்தை உலுக்கும் விதமாக இருக்கிறது எனவும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.


👉 டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


👉 தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


👉 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மே 10-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


👉 வைகாசி மாத பு ஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது.


👉 தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கூடுதல் அரிசி வழங்குவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


👉 தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும்போது உடனுக்குடன் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.


👉 தமிழகத்தில் இன்றும், நாளையும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 


👉 தமிழகத்தில் வருகிற 15-ம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.