இன்றைய ராசிபலன்

 


           இன்றைய ராசிபலன்


   ( 31-05-2021) மேஷம்


விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். தவறிப்போன சில பொருட்களை பற்றிய விபரங்களை அறிந்து கொள்வீர்கள். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கேற்ப பொறுமையுடன் செயல்பட வேண்டும். தாய்வழி உறவினர்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகளும், உதவிகளும் ஏற்படும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்அஸ்வினி : லாபம் மேம்படும். 


பரணி : உதவிகள் கிடைக்கும்.


கிருத்திகை : பொறுமை வேண்டும்.ரிஷபம்


மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமும், அதற்குண்டான அங்கீகாரமும் கிடைக்கும். சிலருக்கு கனவு தொடர்பான விஷயங்கள் ஏற்பட்டு நீங்கும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்கிருத்திகை : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


ரோகிணி : சாதகமான நாள்.


மிருகசீரிஷம் : அங்கீகாரம் கிடைக்கும்.மிதுனம்குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு உதவிகளை செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். விதண்டாவாத சிந்தனைகளையும், முடிவுகளையும் தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். வாகனப் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது விதிகளை மதித்து நடப்பது நன்மையை ஏற்படுத்தும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்மிருகசீரிஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும். 


திருவாதிரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.


புனர்பூசம் : விதிகளை மதிக்கவும். கடகம்


அரசியல் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயமான சூழ்நிலைகள் ஏற்படும். உடற்பயிற்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மற்றவர்களை குறை சொல்லும் பழக்கத்தை குறைத்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான எண்ணங்கள் படிப்படியாக குறையும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்புனர்பூசம் : ஆதாயமான நாள். 


பூசம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


ஆயில்யம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
சிம்மம்
தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். கட்டி தொடர்பான பிரச்சனைகள் விலகும். எதிர்பாராத உதவிகளின் மூலம் கடன் தொடர்பான மனவருத்தங்கள் குறையும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் சோர்வுடன் காணப்படுவீர்கள்.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : மனவருத்தங்கள் குறையும். 


உத்திரம் : சோர்வு உண்டாகும்.கன்னி


பிள்ளைகளுக்கு தேவையான சுபகாரியங்களை செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். விவேகமான சிந்தனைகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனஉறுதியுடன் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், மதிப்புகளும் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.


அஸ்தம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


சித்திரை : தீர்வு காண்பீர்கள். துலாம்உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பாசன வசதிகள் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய விஷயங்களில் இருந்து தெளிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பால் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீடு மற்றும் மனை சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்சித்திரை : மகிழ்ச்சியான நாள். 


சுவாதி : தெளிவு பிறக்கும்.


விசாகம் : லாபம் அதிகரிக்கும்.விருச்சகம்உங்களின் தனிப்பட்ட செயல்களை செய்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். உடல் வளர்ச்சி மற்றும் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். காதுகள் தொடர்பான இன்னல்கள் குறையும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆபரண பராமரிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்விசாகம் : சாதகமான நாள். 


அனுஷம் : ஆலோசனைகள் கிடைக்கும். 


கேட்டை : புரிதல் ஏற்படும்.தனுசு


வேலையாட்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். திடமான சிந்தனைகளில் சிறு மாற்றங்கள் ஏற்படும். பணிவான பேச்சுக்கள் உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பீர்கள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமூலம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 


பூராடம் : நம்பிக்கை மேம்படும். 


உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.மகரம்மனதில் சுதந்திர உணர்வு அதிகரிக்கும். நடுநிலையான முடிவுகளின் மூலம் தெளிவு ஏற்படும். நகைச்சுவையான பேச்சுக்களின் மூலம் அனைவரிடத்திலும் பிரபலம் அடைவீர்கள். ஆடைகள் தொடர்பான விஷயங்களில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் காலதாமதமாக கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்உத்திராடம் : சுதந்திரம் அதிகரிக்கும். 


திருவோணம் : பிரபலம் அடைவீர்கள். 


அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.கும்பம்தேவையற்ற சிந்தனைகள் மற்றும் கவலைகளின் மூலம் தூக்கமின்மை உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இடமாற்றம் சாதகமாக அமையும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும். 


சதயம் : நெருக்கம் அதிகரிக்கும். 


பூரட்டாதி : இடமாற்றம் சாதகமாகும்.மீனம்மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். முழங்கால் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சாமர்த்தியம் வெளிப்படும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சமையல் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்பூரட்டாதி : ஆசைகள் உண்டாகும்.


உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும். 


     

ரேவதி : சாமர்த்தியம் வெளிப்படும்.


               *🤘ஓம் நமசிவாய🙏*


     வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்