* ஒரு வரி செய்திகள்*
👉 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
👉 தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
👉 தமிழக சட்டசபையில் சபாநாயகராக பதவி ஏற்றுள்ள அப்பாவு சட்டசபையின் 18வது சபாநாயகர் ஆவார்.
👉 ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்.
👉 சர்வதேச விமானங்களுக்கான தடையை மே இறுதி வரை நீட்டிக்க நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது.
👉 ரம்ஜான் பண்டிகையைக் கருத்தில் கொண்டு இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி வரை இறைச்சிக் கடைகள் இயங்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
👉 இந்தியா முழுவதும் 9 அரசு மருத்துவமனைகளில் பிராணவாயு (ஆக்ஸிஜன்) உற்பத்தி ஆலைகளை நிறுவ உள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் அறிவித்தது.
👉 கர்நாடகத்தில் இந்திரா உணவகங்களில் கூலித்தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை மக்கள் உணவு பெற்று சாப்பிடலாம் என்று அரசு கூறியுள்ளது. வருகிற 24ம் தேதி வரை இந்த இலவச உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
👉 ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 5 நாடுகளில் இருந்து 5 ஆயிரத்து 805 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
👉 ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்கி பரிசோதனை செய்து வருகின்றனர்.
👉 முன்கள வீரர்களாக கடமையாற்றும் இருபால் செவிலியர்களுக்கு நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக செவிலியர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
👉 தமிழக சட்டப்பேரவையில் போட்டியின்றி சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
👉 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை ரூ.300 சிறப்பு தரிசனத்துக்காக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.