தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய அரசு முடிவு

 


தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்தை அனுப்பிவைக்க தமிழக அரசு முடிவு. 

நோயாளிகளின் விவரங்களின் அடிப்படையில் மருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.


தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டுகள் வழங்கும் மருத்துவமனைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்*


   தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய அரசு முடிவு*  தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகள் மூலம் மருந்து வழங்கப்படும்*


  தமிழகத்தில் மட்டுமே நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினரிடம் ரெம்டெசிவிர் வழங்கப்பட்டு வருகிறது*


   ரெம்டெசிவிர் விற்கும் இடங்களில் கூட்டம் கூடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது  ,  மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் மருத்துவமனை மூலம் மட்டுமே ரெம்டெசிவிர் வழங்க முதல்வர் அறிவுரை*


  ரெம்டெசிவிர் மருந்து தேவை பற்றி தனியார் மருத்துவமனைகள் ஆன்லைன்  மூலம் பதிவிடும் வசதி நாளை மறுநாள் முதல் அறிமுகம் செய்யப்படுகிறது*


  ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களை தனியார் மருத்துவமனைகள் இணையதளத்தில் பதிவிட வேண்டும்*


 ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும் சென்று மருந்துகளை பெறலாம்*


ரெம்டெசிவிர் மருந்து தேவையை பதிவேற்றம் செய்யும் இணையதளம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்*


 அரசிடம் இருந்து பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு மருந்து விற்கப்பட வேண்டும்*

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்றவர்கள் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

   ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளசந்தையில் விற்கபடாதவாறு மருத்துவத்துறை அலுவலர்கள் கண்காணிப்பார்கள்*

                    தமிழக அரசு 


தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை 3.50 லட்சமாக அதிகரித்த‌து மத்திய அரசு 

அனைத்து மாநிலங்களுக்கான மொத்த ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு 76 லட்சமாக அதிகரிப்பு மத்திய அரசு