ஒரு வரிச் செய்திகள்

 


     😡  தமிழகத்தில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க 10 ஆயிரம் கோடிக்கு மேல் பயிர் கடன் வழங்க நடவடிக்கை, சரக்கு வாகனத்தில் காய்கறிகளை நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்றால் நடவடிக்கை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசமி திண்டுக்கல்லில் பேட்டி.


😡ஊரடங்கு நீட்டிப்பு குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தலைமை செயலாளர் இறையண்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை. 


😡தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


😡திண்டுக்கல் அருகே வெள்ளோடு கிராமத்தில் சார்பு ஆய்வாளர் சின்னப்பன் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில்  வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர், சலேத் பிரபாகரன் ஆகியோர் எவ்வித அனுமதி இல்லாமல் துப்பாக்கி மற்றும் பால்ரஸ் குண்டு 100, கருப்பு கரிமருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.😡கோவை ரயில் நிலையத்தில் கத்திக்குத்து - கால் டாக்ஸி ஓட்டுநரான இந்து முன்னணி பிரமுகர் சூர்யா கைது 


😡ரயில் பயணிகளை ஏற்றுவது தொடர்பான வாக்குவாதத்தில் சக ஓட்டுநர் பைசலை கத்தியால் குத்திய சூர்யாவை பிடித்து போலீசார் விசாரணை


😡ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சார்பதிவாளர் ரமேஷ் பத்திரப்பதிவு செய்ய ₹20 ஆயிரம் லஞ்சம் பெற்றதை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து பதிவுத்துறை டி.ஐ.ஜி உத்தரவு😡இந்தியாவில் இதுவரை 20.26 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது


- சுகாதாரத்துறை அமைச்சகம்


😡தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிசை வீடுகள் இடிந்து சேதம்


😡மாவட்டங்களில் கொரோனா குறையவில்லை- முதல்வர்


                                    நிருபர் பாலாஜி