கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் நோயாளிகளை நேரில் சந்தித்த முதல் முதல்வர் மு.க. ஸ்டாலின்

 


  தமிழகத்தில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் பாதுகாப்பு உடை அணிந்து நோயாளிகளை முதலமைச்சர் ஒருவர் சந்திப்பது இந்தியாவிலே  முதல் முறையாகும். 


தமிழகத்தில் கொரோனா 2வது அலை  அதிவேகமாக  பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசு விதிக்கப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை கடந்த 8 நாட்களாக குறைந்து வருகிறது.

                      


மேலும் சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தொழில்நகரமான கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்று 3 மாவட்டங்களில் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது. (30-05-21)இன்று காலை  ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.


அதன்பின் அங்கிருந்து திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2 மாவட்டங்களில் ஆய்வு முடித்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வந்தார். அங்கு கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு எளிதாக அழைத்து செல்வதற்காக 50 இன்னோவா கார்கள் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்பின், முதல்முறையாக எந்த முதல்வரும் கொரோனா நோயாளிகளை வார்டுக்கு நேரில் சென்று அவர்களின் நலம் குறித்து கேட்டறிந்ததில்லை. 
 முதல்முறையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்ட்டுக்கு சென்று நலம் விசாரித்தார். அங்கு, அவர்களுக்கு வழங்கப்பட்டும் வரும் சிகிச்சையை கேட்டறிந்தார். 


மேலும்  3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை முதல்வர் நடத்துகிறார்.


                   நிருபர் .பிரகாஷ்