ஒரு வரி செய்திகள்

             **ஒரு வரிச் செய்திகள்*


👉கொரோனா உதவியாக இந்தியாவுக்கு ரூ.110 கோடியை வழங்குகிறது டுவிட்டர்.


   👉 16வது தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.


முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்


முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினராக பதவியேற்று கொண்டார்கள் .


👉முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்


👉தமிழகத்தில் மேலும் 142 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


👉தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகளுக்கு புத்துயிர்... வேளாண்மைத் துறை அமைச்சர் உறுதி..


👉மதுரை :  மீனாட்சி அம்மன் கோவில் அருகே மஞ்சணகார தெருவில் உள்ள துணிக்கடையில் தீ விபத்து   ,     3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்


👉திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் 11 பேர் பலி.


👉ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று உறுதி; மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி


👉12-15 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அமெரிக்கா ஒப்புதல்


👊👉அமெரிக்காவில் புதிதாக 29,641 பேருக்கு கொரோனா தொற்று. ஒரே நாளில் 368பேர் உயிரிழப்பு


👉இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸை கவலை அளிக்கக்கூடிய திரிபாக வகைப்படுத்தி உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு


👉இந்தியாவில் 24 மணிநேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 3,876 பேர் கொரோனாவால் மரணம்


👉மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 பேர் சஸ்பெண்ட்