நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு

 


            நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு



நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து


"தலைவா" என குறிப்பிட்டு நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து



             திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக, இந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது பெறும் அன்புச் சகோதரர் திரு.ரஜினிகாந்த்  அவர்களுக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் துணை முதல்வர் ஓபிஎஸ்  ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.



           உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.

கமல் வாழ்த்து


       மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தமிழக ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திரையுலக  நடிகர்கள் நண்பர்கள் அனைவரும் ரஜினிக்கு வாழ்த்து கூறினார்கள்