ஒரு வரி செய்திகள்....
👉ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கான
பருவத் தேர்வுகளை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா;நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
👉தமிழக கடல் எல்லைகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது
👉எகிப்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மணலில் புதைந்து போன தங்க நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
👉சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பு ஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
👉பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பயனர்களுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
👉கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.
👉அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்தார்.
👉தமிழகத்தில் மே 2-ந் தேதி வாக்கு எண்ணப்படும் மையங்கள் எவை? என்பது பற்றிய தகவலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
👉தூத்துக்குடி ஏற்றுமதி துணிகள் வைக்கப்பட்டு இருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின
👉மேற்கு தொடா;ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
👉கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் பசுந்தீவன பற்றாக்குறையால் வளர்ப்பு யானைகளின் உடல் எடை குறைந்தது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்
👉சென்னை மாமல்லபுரத்தில் கடலோர மண்டல ஒழுங்கு முறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ரேடிசன் ப்ள ரிசார்ட்டை இடிக்க தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.