சென்னையில் வாக்களித்த பிரபலங்கள்...

 


      ஓட்டு எனது உரிமை. முதல் வாக்களிக்கும்  வாக்காளராக அஜித் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.                         

வாக்குப்பதிவு தொடங்குவதற்கும் 20 நிமிடங்கள் முன்னரே வந்து காத்திருந்து தனது மனைவியுடன் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தன்னைக் காண கூடியிருந்த ரசிகர்களை  வெளியேறும் படி அறிவுறுத்தினார்.            சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் வாக்களித்தார்.


        நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக சைக்கிளில் வந்தார் நடிகர் விஜய்.


  வாக்குச்சாவடி மையம் மிக அருகில் இருந்ததால் சைக்கிளில் வந்தார் விஜய்


நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை


நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பு அலுவலர் ரியாஸ் விளக்கம்


           சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்.


            நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.


             சென்னை : சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார்


              முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் வாக்களித்தார்


           சென்னை வளசரவாக்கம் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில்  சிவகார்த்திகேயன் வாக்களித்தார்


          திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி தனது வாக்கினை பதிவு செய்தார்


கொரோனா சிகிச்சை பெற்று வந்த கனிமொழி எம்.பி பி.பி.இ கிட் அணித்து தனது வாக்கினை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பதிவு செய்தார்.