👉வேஷ்டி சட்டை அணிந்து தமிழ் புத்தாண்டு கொண்டாடிய சி .எஸ்.கே. அணி வீரர்கள்
👉பெருகி வரும் கோவிட்19 தொற்றால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து டாக்கா செல்லும் ஏர் பங்களாதேஷ் விமானங்கள் நாளைமுதல் 20ம்தேதி வரை ரத்து
.👉திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று
👉நெல்லை மாவட்டம் உவரி காவல்நிலைய எஸ்.ஐ. கார்லூஸ் (58) கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
👉தேர்தல் முடிவுகளை மாற்ற சதி நடப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு
வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையில் கணினி நிபுணர்களுக்கு என்ன வேலை? - வேல்முருகன்
👉கர்ணன் படத்தை பார்த்த நடிகர் விக்ரம், இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டுக்கே நேரில் சென்று அவரை பாராட்டியுள்ளார்
👉சென்னையில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,284 பேர் மீது வழக்கு. ஒரே நாளில் ரூ.2,56,800 அபராதம் வசூல்.
👉15 நாட்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் கைவசம் உள்ளன. மொத்தமுள்ள 10 லட்சம் தடுப்பூசிகளில் கோவிஷீல்ட் 80% கோவேக்சின் 20% ஆகும் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி