ரயில் முன்பதிவுக்கு ஏடிஎம் கார்டு கட்டாயம் ரயில்வேத்துறை

          கொரோனா கட்டுப்பாட்டுகளுக்கு பிறகு நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்த பெட்டிகள் மட்டும் இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்களில் பொது பெட்டிகள் இல்லை. அதனால் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது.


 மேலும் டிக்கெட் எடுக்கும் கவுண்டர்களில் எந்த பிரச்னை ஏற்படவில்லை. ரயில்களில் உள்ள அனைத்து வகை வகுப்புகள் முன்பதிவு செய்யும் போது கட்டாயம் ஏடிஎம் கார்டுகளை வைத்து தான் முன்பதிவு செய்ய வேண்டும்.


 மேலும் நேரிடையாக பணம் கொடுப்பதை ரயில்வே நிர்வாகம் குறைத்து வருகிறது.


படிப்படியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறி வருகிறது. ஆனால் ஏடிஎம் கார்டு இல்லாத மக்களிடம் தற்போது பணம் பெற்று வருகின்றனர். இதை முழுமையாக தொடர முடியாது என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ரயில்வே ஸ்டேஷன்களில் முன்பதிவு செய்ய செல்பவர்கள் இனி கட்டாயம் ஏடிஎம் கார்டுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கடைபிடிக்க சொல்லும் வேலையில், ரயில்வே ஸ்டேஷன்களிலும் இதை அமல்படுத்தி உள்ளது.


ஏடிஎம் கார்டுகளை வைத்து தான் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சாதாரண கூலி வேலை பார்ப்பவர்கள், வியாபாரிகள், பழவியாபாரிகள்  எந்த நேரமும் ஏடிஎம் கார்டுகளை வைத்திருக்க முடியாது என அவர்கள் வேதனையும் புகாரும் கூறுகின்றனர். எனவே ஏடிஎம் கார்டுகளை கட்டாம் என்ற கட்டுப்பாட்டை நீக்க கோரிக்கை எழுந்துள்ளது.