இன்றைய ராசிபலன்

 



       இன்றைய (06-04-2021) ராசி பலன்கள்


மேஷம்


புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். குடும்ப தொழில் தொடர்பான உதவிகள் சாதகமாக அமையும். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் அகலும்.



ரிஷபம்


உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



மிதுனம்


புதிய நபர்களுடன் பேசும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தலைவலி சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.



கடகம்


மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவர் வழி உறவுகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவது நன்மையை அளிக்கும்.



சிம்மம்


வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சூழ்நிலைகள் ஏற்படும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.



கன்னி


மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமும், திறமையும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் கிடைக்கும் 


துலாம்


உடல் ஆரோக்கியம் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் மேம்படும். மாமியார் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.



விருச்சகம்


நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.  விளையாட்டு தொடர்பான போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும்.


தனுசு


எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் ஆலோசனைகள் கேட்பதை குறைத்து கொள்ளவும். மனதிற்கு பிடித்த விதத்தில் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் மூலம் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். வாக்குவாதங்களின் போது பேச்சுக்களில் கவனம் வேண்டும்


மகரம்


கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். கேளிக்கைகள் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உறவினர்களின் வருகையின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சர்வதேச வணிகம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.


கும்பம்


எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். விவாதங்கள் புரிவதில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புரிதலும், அதன் கண்ணோட்டங்களில் மாறுதல்களும் உண்டாகும். மலைப்பிரதேச பயணங்கள் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும்.


மீனம்


இணையம் சார்ந்த பணிகளின் மேன்மை உண்டாகும். உயர்கல்வியில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த விதத்தில் ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். செய்தொழிலில் மேன்மையான வாய்ப்புகளும், செல்வாக்கும் அதிகரிக்கும். மின்சாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும்.


                              *சுபம்*