சின்னக் கலைவானர் விவேக் காலமானார்

 


             அறிவுப்பூர்வமான நகைச்சுவையால் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த சின்னகலைவாணர் விவேக் காலமானார் அவருக்கு வயது 59

நடிகர் விவேக் மறைவுக்குத் திரைப்படத் துறையினர் ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 5 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் விவேக் நடித்துள்ளார்*


2020 ஆம் ஆண்டு தாராள பிரபு என்ற படத்தில் கடைசியாக நடித்தார் விவேக்*


தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்*


கோவில்பட்டியில் 1961 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகர் விவேக்


திரைப்படங்களில் மூடநம்பிக்கைகளை சாடியதால் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டவர் விவேக்