சிக்கன் நெய்சோறு
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
இப்போது குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கனுடன் நெய் சேர்த்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
சிக்கன் - 1 கிலோ (நறுக்கியது)
பாசுமதி அரிசி - 1 கிலோ
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பு ன்
கரம் மசாலா தூள் - 2 டேபிள் ஸ்பு ன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் - 1
பச்சைமிளகாய் - 12
வெங்காயம் - அரை கிலோ
தக்காளி - 4
இஞ்சி - 2 துண்டு
பு ண்டு - 15 பல்
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பட்டை - சிறிதளவு
புதினா - அரை கட்டு
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
முந்திரிப்பருப்பு - 15
தேங்காய் - 1 மூடி
நெய் - 200 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
👉 முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனுடன் 2 மடங்கு நீர் ஊற்றி குழையாமல் அரிசியை வேகவைத்து கொள்ளவும். பின் ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறவைக்கவும்.
👉 பிறகு வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சி, பு ண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காயை விழுது போல் அரைத்துக் கொள்ளவும். சிக்கனை நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும்
👉 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரிப்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தனியே வைக்கவும். பின் ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்துக் பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் பாதியை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
👉 பிறகு வதக்கிய வெங்காயத்துடன் தட்டி வைத்த இஞ்சி, பு ண்டு சேர்த்து நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அதில் தக்காளி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும்.
👉 கடைசியில் தேங்காய் விழுதைச் சேர்த்து சிக்கனை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். சிக்கன் கறி நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும், எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து விடவும். பிறகு கொத்தமல்லித்தழை, புதினாவைத் தூவவும்.
👉 பிறகு ஆற வைத்திருக்கும் சாதத்தில் வதக்கிய கறி மசாலாவைக் கொட்டி நன்கு கிளறவும். இறுதியாக வறுத்த முந்திரிப்பருப்பு, வெங்காயத்தையும், நெய்யையும் சேர்த்து கிளறிப் பரிமாறினால், சு ப்பரான சிக்கன் நெய்சோறு தயார்!!!.
அன்புடன்
கார்த்திகா