இரு வரி செய்திகள்

 


       👉சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சில்லறை மற்றும் சிறு மொத்த கடைகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன - நேற்று போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் திங்கள் வரை சில்லறை விற்பனை கடைகளுக்கு அனுமதி அளித்தது அரசு


👉காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவுப்படுத்தப்பட்டால் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளம் மண் அரிப்பால் காணாமல் போகும் : ஆய்வில் எச்சரிக்கை!


👉மதுரையில் முகக்கவசம் அணியாத காரணத்தால் அரசு பேருந்து ஓட்டுநருக்கு ரூ.200 அபராதம்


👉கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா


👉திண்டுக்கல் செய்தி


கொரோனா தடுப்பு ஊசி அந்தந்த பகுதிகளுக்கு சென்று திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக இன்று முதல் போடப்படுகிறது, முதல் நிகழ்வாக கிழக்கு மரியநாதபுரம் செபஸ்தியார் கோயில் முன்பாக 45 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சிறப்பு முகாம் நடைபெறுகிறது


👉BREAKING | மேற்கு வங்க தேர்தலில் 4 பேர் சுட்டுக்கொலை