இன்றைய சமையல்

 


ஆனியன் ரவா தோசை 

தினமும் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க விரும்பினால் அவர்களுக்கு ஆனியன் ரவா தோசை செய்து கொடுக்கலாம்.

இப்போது ஆனியன் ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் :-

ரவை - 2 கப் (வறுத்தது)

அரிசி மாவு - 1 கப்

மைதா மாவு - 3 tsp

உப்பு - தேவையான அளவு

புளித்த தோசை மாவு  - 1 கப் 

மிளகு - 2 tsp

ஜீரகம் - 2 tsp

வெங்காயம் - 2 

கடலைப்பருப்பு - 2 tsp

பச்சை மிளகாய் - 2 

செய்முறை :-

 ஆனியன் ரவா தோசை செய்வதற்கு முதலில் மைதா மாவு, ரவை, அரிசிமாவு, தோசை மாவு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.

 பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் மிளகு, ஜீரகம், வெங்காயம், கடலைப் பருப்பு, பச்சை மிளகாய ஆகியவற்றைப் போட்டு தாளித்து மாவில் போட்டுக் கலந்து கொள்ளவும்.

 பிறகு தோசைக்கல்லில் கல்லின் ஓரத்தில் இருந்து மாவை ஊற்றி, எண்ணெயை ஊற்றி ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து எடுக்கவும். சுவையான ஆனியன் ரவா தோசை ரெடி. 

தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம் 


அன்புடன் 

கார்த்திகா