இன்றைய ராசிபலன்
04.4.2021
மேஷம்
கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தொழில் தொடர்பான பயணங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மாறுபடும். முக்கியமான பேச்சுவார்த்தைகளின்போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
ரிஷபம்
உடன்பிறப்புகளிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது சற்று விழிப்புணர்வு வேண்டும். கவனக்குறைவினால் சில அவப்பெயர்கள் ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடும். நெருக்கமானவர்களிடம் கருத்துக்களை பகிரும்போது சிந்தித்து செயல்பட வேண்டும்.
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் நினைத்த எண்ணங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பும், புரிதலும் மேம்படும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
கடகம்
பூர்வீக சொத்துக்களின் மூலம் நன்மை ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் பொருளாதார மேம்பாட்டிற்கான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்களுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.
சிம்மம்
முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செய்யும் செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.
கன்னி
உபரி வருமானத்தின் மூலம் பொருளாதாரம் மேம்படும். புதிய ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். தம்பதியர்களின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கும், மரியாதையும் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.
துலாம்
மறைமுகமாக இருந்துவந்த சில தடைகளை தகர்த்தெறிந்து எண்ணிய இலக்கை அடைவீர்கள். மனதில் இருந்துவந்த ஆசைகள் நிறைவேறும். விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். வாகனப் பயணங்களில் வேகத்தைவிட விவேகம் அவசியமாகும். உறவுகள் பற்றிய புரிதலும், உதவிகளும் கிடைக்கும்.
விருச்சகம்
சுபகாரியங்களை முன்னின்று செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சார்ந்த சிந்தனைகளும், செயல்பாடுகளும் மேம்படும். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் தொழிலில் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதிற்கு பிடித்த ஆடம்பர அலங்காரப் பொருள்
வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
புதியதை பற்றி கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனதில் தெளிவும், நம்பிக்கையும் அதிகரிக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் அகலும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும்.
மகரம்
சமூகப்பணிகள் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிகள் மேம்படும். தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்கு உதவிகளை செய்வதன் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நீர்நிலைகள் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விவசாயப் பணிகளில் அரசு தொடர்பான உதவிகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். அரசியல் துறையில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும்.
மீனம்
வாழ்க்கைத்துணையிடம் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். பத்திரிக்கை சார்ந்த துறையில் புதிய மாற்றங்கள் நேரிடும். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் ஏற்பட்டு மறையும். வேலையாட்களுடன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.
*சுபம்*
*🤘ஓம் நமசிவாய🙏*