இரு வரி செய்திகள்

 

      

👉சாத்தான்குளம் வழக்கை கேரளாவிற்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


மறைந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்


👉நீதிபதிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை உண்மைக்கு மாறாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 


👉விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு பிரான்ஸ் உதவுகிறது. இதற்காக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருக்கிறது.


👉 அமெரிக்க துணை அதிபர் கமலா ஹhரிஸ் அரசுமுறை பயணமாக மெக்சிகோ செல்ல உள்ளார்.


 👉உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷ் வசு லித்த, 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஆயிரம் காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பிவிட்டன.


👉அமெரிக்க நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்துள்ளார்.


👉கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் 'விஸ்டன்" இதழ் பட்டியலில் சச்சின் மற்றும் விராட்கோலி பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


👉தமிழகம் முழுவதும் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை வழக்கறிஞர்கள் சங்க அலுவலகங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அறைகளை மூட உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.👉ஒவ்வொரு நாளும் உங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்த.. இங்கே கிளிக் செய்யுங்கள்!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


👉டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் என்று ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் டோஷிஹிரோ நிகாய் தெரிவித்துள்ளார்.


👉ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில் 59 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா தங்கம் வென்றார்.


👉 நாடு முழுவதும் 18-ந்தேதி நடைபெறுவதாக இருந்த முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்து உள்ளது.


👉 தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேர் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


👉கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி செய்யப்படுவது குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.


*👉வாக்கு எண்ணும் மையங்களில் லாரிகள் செல்லும் நிகழ்வுகளால் சர்ச்சை - தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து திமுக நிர்வாகிகள் ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, பொன்முடி புகார் மனு.*


வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்


வாக்கு எண்ணும் மையங்களில் 12ம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. 


வாக்கு எண்ணும் மையங்களில் விதிமீறல் என திமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு.


👉டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு தொடங்கியது. நாடு சந்திக்கும் பாதுகாப்பு சவால்கள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்படுகிறது.


👉சென்னையில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என மாற்றப்பட்ட சாலைக்கு மீண்டும் பெரியார்


👉ராகுல்காந்தி, ஆலோசனை வழங்கும் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டுமே தவிர, அரசை கேள்வி மட்டும் கேட்க கூடியவராக இருக்க கூடாது - எல்.முருகன்