சென்னை வண்ணாரப்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட திருவெற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை , ராயபுரம், காசிமேடு, கொருக்குப்பேட்ட, ஆர்கேநகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்கள் IMEI நம்பர்களை கொண்டு கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை நேற்று(20-04-21) காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்துக்கு ஒரு வருடத்தில் பறிமுதல் செய்த 42,05,911 ரூபாய் மதிப்புடைய 292 செல்போன்கள் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் திருமதி சுப்புலட்சுமி உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
உடன் உதவி ஆணையர்கள் ராயபுரம் சீனிவாசன் வண்ணாரப்பேட்டை சம்பத்து மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் சரவணன் ,புவனேஸ்வரி, கௌசல்யா ஆகியோர் உடன் இருந்தனர்.