இன்றைய ராசிபலன்

               20-04-2021 


இன்றைய ராசிபலன்


மேஷம்


அலைச்சல்கள் தொடர்பான பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பெரியவர்களிடத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.ரிஷபம்


சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள்.மிதுனம்


எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். தர்ம காரியங்கள் தொடர்பான சிந்தனைகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் மேம்படும். வாக்குவன்மையால் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.கடகம்


நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.சிம்மம்


நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செலவிடுவது நன்மையளிக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் உண்டாகும். கன்னி


உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்பட வேண்டும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை குறைத்துக்கொள்ளவும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.துலாம்


கலை நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்குவதற்கான சூழல் உண்டாகும். இலக்கியம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.விருச்சகம்


சங்கீத பயிற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையதள பணியில் நல்ல லாபத்தை தரும். செய்யும் செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். நிறுவனங்களில் தலைமை பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும்.
தனுசு


மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை ஏற்படும். புதிய நபர்களின் வருகையால் சுபவிரயம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் செயல்பாடுகளை குறை சொல்வதை தவிர்க்கவும்.மகரம்


கலைப்பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். கல்வி தொடர்பான செயல்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.கும்பம்


ஆவணங்களை கையாளும்போது நிதானம் வேண்டும். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பொதுக்கூட்ட பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு செய்து முடிப்பீர்கள்.மீனம்


மகான்களின் தரிசனம் கிடைக்கும். வாரிசுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். தற்பெருமை சார்ந்த செயல்களை குறைத்துக்கொள்வது நன்மையளிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.


                           *சுபம்*

               *🤘ஓம் நமசிவாய🙏*