இன்று ஒரு சமையல் குறிப்பு முந்திரிப்பருப்பு பக்கோடா

                   இன்றைய சமையல் 


முந்திரி பருப்பு பக்கோடா


பலகார வகைகளில் ஒன்று பக்கோடா.


 மாலை நேர சிற்றுண்டியாக பக்கோடாவை சாப்பிடலாம். 


முந்திரி பருப்பைப் பயன்படுத்தி முந்திரி பருப்பு பக்கோடாவை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.


தேவையானப் பொருட்கள் :


முந்திரி பருப்பு - 2 கப்


கடலை மாவு - 2 கப்


அரிசி மாவு - 2 கப்


நெய் - 3 டீஸ்பு ன்


மிளகாய் தூள் - 4 டீஸ்பு ன்


கொத்தமல்லி இலை - 1/4 கப் (நறுக்கியது)


உப்பு - தேவையான அளவு


எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை :


👉 முந்திரி பருப்பு பக்கோடா செய்வதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் கடலை மாவு, அரிசி மாவு, முந்திரி பருப்பு, மிளகாய் தூள், உப்பு, நெய் ஆகிய அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகப் போட்டு, அதனுடன் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.


 பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சு டானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உதிரி உதிரியாகப் போட்டு, மொறுமொறுப்பாக வரும் வரை வேகவைத்து எடுக்கவும்


மொறுமொறுப்பாக உள்ள முந்திரி பக்கோடாவின் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவவும்


சுவையான முந்திரி பருப்பு பக்கோடா ரெடி.

 

சுவையான  தேநீருடன்

சாப்பிட வேண்டும். 


குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் 


அன்புடன் 


கார்த்திகா