இருவரி செய்திகள்

 


**********************************

தமிழகம் முழுவதும் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களை எக்காரணத்தை கொண்டும் கல்லூரிக்கு நேரில் வரவழைக்கக்கூடாது என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

*********************************

பெங்களுரில் பொதுமுடக்கம் காரணமாக 14 நாட்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


உத்தரப்பிரதேசத்தில் உள்ள 5 நகரங்களில் 14 நாட்கள் பொதுமுடக்கத்தை அறிவிக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் பயணிகள் வரத்து குறைவால் சில எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.


அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று காலை 7.51 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 6.2 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் வரும் 30ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.


****************************************

வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க பேரூராட்சி பகுதியில் நாளை 144 தடை விதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.


பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவணங்களை காண்பித்து வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி வர இ-பதிவு நடைமுறை தொடரும் என தெரிவித்துள்ளார்.

************************************************

ஐபிஎல் கிரிக்கெட்டில் டேவிட் வார்னருக்கு பிறகு 5,000 ரன்களை கடந்த 2வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை ஏபி டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க;ர் அணி 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்று இரவு 07.30 மணிக்கு நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன