குழந்தையை காப்பாற்றியவர்க்கு ஜாவா நிறுவனம் புதிய பைக் பரிசு

 


                 மும்பையில் சில தினங்களுக்கு முன் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை தன்னுயிரை பற்றி  கவலைப்படாமல் விரைந்து சென்று காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் செல்கேயின் துணிச்சலைப் பாராட்டி. அவருக்குப் புதிய பைக் பரிசளிப்பதாக ஜாவா நிறுவனம் அறிவித்துள்ளது.

மும்பை வாங்கனி ரயில் நிலையத்தில் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை, எதிரே ரயில் வருவதை அறிந்தும் துணிச்சலுடன் ஓடிச் சென்று ரயில்வே ஊழியர் மயூர் செல்கே மீட்ட காட்சி மிக விரைவாக அனைத்து இணையத்தில் பரவியது.


இந்தக் காட்சியை இணையத்தில் பார்த்த ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இயக்குநர் அனுபம் தாரிஜா, அவருக்குப் புதிய பைக்கை பரிசளிப்பதாகத் அறிவித்துள்ளார் .

                                               நிருபர் பாலாஜி