தமிழகத்தில் 94 உயிரிழப்பு- உச்சத்தில் இருக்கும் சென்னை

 

தமிழகத்தில் 26.04.2021 ஒரே நாளில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 26.04.2021 ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

 இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக 10,97,682 அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,250 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும் 94 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,625 ஆக உயர்ந்துள்ளது. 

அதுமட்டுமில்லாமல் 26.04.2021, 13,625 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.இதுவரை தமிழகத்தில் 9,76,876 பேர் வீடு திரும்பியுள்ளனர்.1,07,145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

26.04.2021 ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பில் 44 பேர் தனியார் மருத்துவமனை மற்றும  50 பேர் அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும்  35 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.