சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 3 பேர் கைது

 


              சென்னை தாம்பரம் அடுத்த கௌரிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். அவர் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். கார்த்திக்கை நம்பிய அந்த சிறுமி அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார்.                            

தன்னிடம் காதல் வசப்பட்ட சிறுமியிடம் ஆசை வார்த்தைப் பேசி கார்த்திக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு சிறுமியை மிரட்டி அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


சிறுமியை தான் வீடியோ எடுத்து வைத்திருப்பது குறித்து கார்த்திக் தனது நண்பரான மணிகண்டனிடம் கூறியுள்ளார். அவரும் கார்த்திக்குடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை மணிகண்டன் திமுக தாம்பரம் சட்டமன்ற தொகுதி சமூக வலைத்தள பொறுப்பாளரான தனசேகரிடம் சொல்ல , அவரும் இவர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


இவர்கள் மூவரும் சிறுமியுடன் எடுத்துக்கொண்டு வீடியோக்களை காட்டி மிரட்டியும் வந்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டில் இருந்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது

 இந்த கொடுமையால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். கார்த்திக் சிறுமியை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். கார்த்திக் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த சிறுமி, நடந்த அனைத்தையும் தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் தாய், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


அந்தப் புகாரின் பேரில் மணிகண்டனையும் கார்த்திக்கையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவான தனசேகரை தேடி வருகின்றனர். ஆசை வார்த்தைப் பேசி சிறுமி ஓராண்டுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.