அதிமுக வேட்பாளரின் சர்ச்சை பேச்சு

 


ஜெயலலிதாவை ஏமாற்றலாம் ஆனால் முதல்வர் எடப்பாடியை ஏமாற்றவே முடியாது என, தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளரான டி.கே.எம்.சின்னையா பேசியது, அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி,  தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாம்பரம் தொகுதி முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் நேற்று சேலையூர் பகுதியில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சுலபமாக ஏமாற்றி விடலாம். 

ஆனால் எடப்பாடி பழனிசாமியை யாராலும் ஏமாற்ற முடியாது. 

ஜெயலலிதாவை, அரசு அதிகாரிகள் மிக சுலபமாக ஏமாற்றி வந்தனர். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிகாரிகளால் ஏமாற்றவே முடியவில்லை’’  என்று கூறினார். 

இவரது பேச்சு அங்கிருந்த அதிமுகவினரிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.