திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி

 


இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்களை மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு என தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக,  மதிமுக,இடதுசாரி அக்கட்சிகள், மமக ஐயுஎம்எல், கொமதேக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்களை மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

மேலும் திமுக சாட்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.