ரவையில் தான் கேசரி செய்து சாப்பிட்டிருப்போம், ஆனால் இன்று புதுவிதமாக சேமியாவில் எப்படி கேசரி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
சேமியா கேசரி செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
- நெய் – 2 ஸ்பூன்
- முந்திரி பருப்பு – 10 அல்லது 15
- திராட்சை – 10 அல்லது 15
- சேமியா -1 கப்
- தண்ணீர் – 2 கப்
- சர்க்கரை – தேவையான அளவு
- சர்க்கரையுடன் இடித்த ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்
- கேசரி பவுடர் – 2 சிட்டிகை
- செய்முறை
முதலில் ஒரு சட்டியில் சிறிதளவு நெய் ஊற்றி உலர் திராட்சை மற்றும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
அதன் பின் அதே சட்டியில் சிறிதளவு சேமியா எடுத்து நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
நெய்யில் சேமியாவை வறுத்து செய்தால் இன்னும் சுவை அதிகமாக இருக்கும்.
அடுத்ததாக சேமியாவை வேக வைக்க கடாயை ஹீட் செய்ய வேண்டும்.
அடுத்து ஹீட் செய்த பிறகு கடாயில் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு வறுத்து தட்டில் வைத்த சேமியாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
தண்ணீர் சுண்டும் அளவிற்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். நன்றாக சேமியா வெந்த பிறகு சர்க்கரை தேவையான அளவிற்கு சேர்க்கவும்.
சர்க்கரை சேர்த்த பிறகு நன்றாக கலந்து வேக வைக்க வேண்டும்.
இப்போது சர்க்கரையுடன் இடித்த ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன் சேர்க்க வேண்டும்.
ஏலக்காய் பொடியுடன் கேசரி பவுடர் 2 சிட்டிகை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
கேசரி பவுடர் சேர்க்காமல் குங்குமப்பூ சேர்த்து கூட இந்த சேமியாவை செய்யலாம்.
சேமியா வெந்த பிறகு வறுத்து வைத்த முந்திரி திராட்சயை சேர்த்து நன்றாக கிளறி விட்டு கடாயில் இருந்து சேமியாவை இறக்கிவிட வேண்டும்.
அவ்ளோதாங்க இந்த சுவையான சேமியா கேசரி ரெடி. இந்த ரெசிபியை எல்லாரும் வீட்ல கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.
இப்பொது சுவையான சேமியா கேசரி தயார்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா