நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடயுள்ளார்.
__________________________
அதிமுகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று இறுதியாகிறது. அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
___________________________
தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்த நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
__________________________
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வேலூர் மற்றும் தஞ்சாவூர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூரில் நாளையும், தஞ்சையில் நாளை மறுநாளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவிருந்தார்.
______________________
திருவள்ளூர் செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலில் இருந்து குதித்து தாய், 13 மற்றும் 7 வயதே ஆன இரு மகள்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
______________________
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.11,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.45-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.