நத்தம் விஸ்வநாதன் மீது போலீசார் வழக்கு

 

நத்தம் விஸ்வநாதன் மீது குற்றப்பிரிவு 171Eன் கீழ் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் ஓட்டுக்கு பணம் வழங்க கூடாது என அறிவுறுத்தி உள்ளது. மேலும், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதன், பிரச்சாரம் மேற்கொண்ட போது, அங்கு ஆரத்தி எடுத்த பெண்களின் தட்டில் பணம் போட்டுள்ளார். 

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நத்தம் விஸ்வநாதன் மீது குற்றப்பிரிவு 171Eன் கீழ் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் பிரிவு கண்காணிப்பு குழு தலைவர் மைக்கேல் ஆரோக்கியராஜ் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.