ஆ ராசா மீது காவல்துறை வழக்குப்பதிவு

 


         முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.


திமுக எம்.பி ஆ.ராசா, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, முதல்வரை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தன.


மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் தரக்குறைவாக பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  இனிமேல் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடாத வகையில் நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகாரளித்திருந்தது.


 புகாரின் அடிப்படையில் முதல்வரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த புகாரில் திமுக எம்பி ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக திட்டுதல், தேர்தல் நடத்தை விதிமீறல், கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய பரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.