மக்களவைத் தொகுதி -காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த்



 கன்னியாகுமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோருக்கு மார்ச் 5 வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனுவை சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்தார்.

மேலும், மறைந்த வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இதனால், யாரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட காங்கிரஸ் தலைமை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஏற்கனவே பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.