அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் இறுதியானது

 அதிமுக கூட்டணியில், பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் இன்று  வெளியிடப்படும் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு  வருகிறது. அதிமுக தலைமையகத்தில் வைத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உடன்  ஜி.கே.மணி ஆலோசனை நடத்திய பின், செய்தியாளர்களை சந்தித்து  பேசினார்.

அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணியில், பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதாகவும், அதிமுக கூட்டணியில், பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் இன்று  வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.