சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் தேர்தல் அலுவலகத்தில், அந்தந்த தொகுதிகளுக்கான வேட்புமனு பரிசீலினை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள், பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்படுகிறது. அப்போது, வேட்புமனுவில் உரிய தகவல் இல்லாததால் நிறுத்தி வைக்கப்படுகிறது.
அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்து விவரங்களை முறையாக காட்டவில்லை என சுயேச்சை வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால், வருமானவரி தொடர்பான ஆவணங்களில் விளக்கம் கேட்டு, சைதை துரைசாமி மனு நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.