தேர்தல் செய்திகள்

 


தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிக்கையை மார்ச் 11ம் தேதி வெளியிடுகிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் மனங்களை கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11-ஆம் தேதி வெளியிடப்படுகிறது என முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ் மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். வரும் 12-ஆம் தேதி தேர்தல் வேட்பு மனு தாக்கலை தொடங்க இருப்பதால் 11ஆம் தேதி தேர்தலுக்கான அறிக்கை வெளியிடப்படுகிறது.

_________________________

காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்பதை திமுகவிடம் கூறினோம். திமுக கூட்டணியில் அனைவரும் உள்ளோம் என்ற நோக்கில்தான் ராகுல் பரப்புரை என தெரிவித்தார்.

மு.க ஸ்டாலின் – ராகுல்காந்தி இணைந்து பரப்புரை மேற்கொள்வது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.

__________________________

பாமகவுக்கு இணையான தொகுதிகளை தேமுதிக கேட்கும் நிலையில், அதிமுக தரப்பில் 14 தொகுதிகள் தர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழு வீச்சில் பரப்புரை செய்ய இயலாத சூழல் மற்றும் வாக்கு சதவீதம் சரிவால் தொகுதிகளை குறைத்து கொள்ள அதிமுக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

_________________________

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கடந்த இரு நாட்களாக தீவிரமாக  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து பாஜவுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 முதல் 26 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.