என்னுடைய இலக்கு இது தான்-பொன். ராதாகிருஷ்ணன்

 


என்னுடைய இலக்கு கன்னியாகுமரி மாவட்டத்தை, இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக மாற்றுவது தான் என்று பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே போட்டியிட்டுள்ளார். இதில் 7 முறை போட்டியிட்டு 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 5 முறை தோல்வியை தழுவியுள்ள நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 8-வது முறையாக பாஜக சார்பில் பொன்.ராதா கிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.

 இந்நிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னெடுத்த அத்தனை பணிகளும் முடிக்கப்படும்.

 என்னுடைய இலக்கு கன்னியாகுமரி மாவட்டத்தை, இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக மாற்றுவது தான் என்றும்,   இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பேன்.

 மக்களுக்கு விருப்பமில்லாத எந்த திட்டத்தையும் கொண்டு மாட்டேன் என்றும் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.