முதுகில் குத்திய துரோகிகள்- முன்னாள் முதல்வர் நாராயணசாமி

 


காங்கிரஸ் கட்சியை முதுகில் குத்திவிட்டு சென்ற அந்த துரோகிகள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, காங்கிரஸ்-திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை கவிழ்த்திருக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய  அவர், காங்கிரஸ் கட்சியை முதுகில் குத்திவிட்டு சென்ற அந்த துரோகிகள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, காங்கிரஸ்-திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை கவிழ்த்திருக்கிறார்கள்.

இதற்கான பலனை தற்போது அவர்கள் அனுபவித்து  கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிற்பதற்கு எந்த தொகுதியும் இல்லாமல், தொகுதிகளை தேடி கொண்டிருக்கிறார்கள். முதலைமைச்சர் நாற்காலி வேண்டுமென்று போனவர்கள் எல்லாம் நடுத்தெருவில் நிற்கிறார்கள். 

இதுதான் பாரதிய ஜனதா  சரித்திரம். புதுச்சேரி மாநில மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி மாநில மக்கள் 100% பாரதிய ஜனதா கட்சியை வெறுக்கிறார்கள் என  பேசியுள்ளார்.