*நாளை முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது*
வங்கிகளின் வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கு வங்கி செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
15,16 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. நாளை இரண்டாவது சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை உள்ளது. எனவே நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை , டெபாசிட் , செக் கிளியரன்ஸ் போன்ற வங்கிப் பணிகள் பாதிக்கப்படக்கூடும்.
இதனையடுத்து ஏடிஎம் சேவைகளும் செயலிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.