வாக்குப்பதிவு இயந்திரம் - வதந்தி - கடும் நடவடிக்கை – தேர்தல் ஆணையம்

 


வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் .6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் முறைகேட்டில் ஈடுபடலாம் என சில ஆண்டுகளுக்கு முன் கூறியது, தற்போது  சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்த தவறான தகவல் குறித்து டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும்,  வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் முறைகேட்டில் ஈடுபடலாம் என தற்போது வதந்தி பரப்பியவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • T