தேர்தல் செய்திகள்

 
பாட்டாளி மக்கள் கட்சி கீழ்வேளூர் தனி தொகுதிக்கு புதிய வேட்பாளரை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், நாகப்பட்டினம் மாவட்டம் 164, கீழ்வேளூர் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு.வேத.முகுந்தன் அவர்கள் மாற்றப்படுகிறார்.

அவருக்குப் பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் திரு.வடிவேல் இராவணன் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடுவார் என்பதை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்

___________________________

பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட தோப்பு வெங்கடாசலம் முடிவு செய்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் தனக்கு வருகின்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

______________________

மாணவரணி உள்பட பலவற்றில் பதவி வகித்து தற்போது திமுக தலைவராகி உள்ளேன் என முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.

திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் முக் ஸ்டாலின், மெட்ரோ ரயில் சேவையை கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் 13 வயதிலேயே இந்திக்கு எதிரான போராட்டத்தில் கருணாநிதியுடன் பங்கேற்கிறேன். மாணவனாக இருந்தபோது மாணவர்களை ஒன்று திரட்டி இந்திக்கு எதிராக வீதியில் எறங்கி போராடினேன். மாணவரணி உள்பட பலவற்றில் பதவி வகித்து தற்போது திமுக தலைவராகி உள்ளேன் என கூறியுள்ளார்.

_____________________________

கறுப்பு பணம் இல்லையென்றால் ஏன் கவலைப்படவேண்டும். வருமான வரித்துறைக்கு அதிமுக, திமுக , காங்கிரஸ், பாஜக என்ற பாகுபாடு கிடையாது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

மேலும், கறுப்பு பணம் இல்லையென்றால் ஏன் கவலைப்படவேண்டும். 

வருமான வரித்துறைக்கு அதிமுக, திமுக , காங்கிரஸ், பாஜக என்ற பாகுபாடு கிடையாது. 

பாஜக-விடம் பணமே இல்லை. அப்புறம் எப்படி கறுப்பு பணம் இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில், பல இடங்களில், அரசியல் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.