சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் - மக்கள் நீதி மய்யம்

 சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிடுகிறார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. .

இதனிடையே, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதன்பின் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், நாளைக்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு என அனைத்தும் நிறைவடைத்துவிடும் என தெரிவித்திருந்தனர்.