பாஜகவில் காலையில் இணைந்த சரவணன் உட்பட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

 



அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இது குறித்த வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.

இந்த முதல் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட ஆறு பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்த 6 பேர் கொண்ட பட்டியில் மிகவும் கவணிக்கதக்கதாக மாறியுள்ளது ஏன்னென்றால் இந்த 6 பேர் பட்டியலில் 4 தொகுதிகளையும் 2 தொகுதியில் காங்கிரஸை நேரடியாக எதிர்கொள்கிறது பாஜக.

இதில் கோவை தெற்கு மும்முனை போட்டியாக மாறியுள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பாக  கமல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மயூரா மற்றும்  வானதி சீனிவாசன் போட்டியிடுகின்றனர்.

குஷ்பு களமிறக்கப்பட்டுள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பாக டாக்டர் எழிலன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் திருநெல்வேலியில் அவரச அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன் மற்றும்  திமுகவில் இருந்து  வெளியேறி பாஜாகவில் 14.03.2021 காலை இணைந்த சரவணனுக்கு மதுரை வடக்கு ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் இன்னும் 3 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிட வேண்டியுள்ளது.

கட்சி தாவிய எம்எல்ஏ டாக்டர் சரவணனுக்கு பாஜவில் சீட் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை வடக்கு தொகுதி பாஜ அலுவலகத்தை பூட்டி விட்டு தொண்டர்கள் வெளியேறிச் சென்றனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருப்பவர் டாக்டர் சரவணன். 

டாக்டர் சரவணன்.  முதலில் மதிமுகவில் இருந்தார். பின்னர் தேமுதிகவிற்கு சென்றார். அங்கிருந்து தாவி பாஜவில் இணைந்தார். பின்னர் திமுகவிற்கு வந்து எம்எல்ஏ ஆனார். 

இந்தத் தேர்தலில், டாக்டர் சரவணனுக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் பாஜவில் 14.03.2021  காலை இணைந்தார்.

  1. தாராபுரம் (தனி ) -எல்.முருகன்
  2. கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
  3. காரைக்குடி -ஹெச் .ராஜா
  4. அரவக்குறிச்சி -அண்ணாமலை
  5. நாகர்கோவில் -எம்.ஆர்.காந்தி
  6. ஆயிரம் விளக்கு -குஷ்பு
  7. துறைமுகம் – வினோஜ் பி.செல்வம்
  8. திருவண்ணாமலை – தணிகைவேல்
  9. மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி
  10. திட்டக்குடி – பெரியசாமி
  11. திருவையாறு – பூண்டி வெங்கடேசன்
  12. மதுரை வடக்கு – சரவணன்
  13. குளச்சல் -பி.ரமேஷ்
  14. திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
  15. ராமநாதபுரம் -டி.குப்புராமு
  16. விருதுநகர் –  பாண்டுரங்கன்
  17. திருக்கோவிலூர் – வி.ஏ.டி.கலிவரதன்
இந்நிலையில்,  அதிமுக கூட்டணியில் உள்ள பாஜவுக்கு மதுரை வடக்கு ஒதுக்கப்பட்டது. 

இத்தொகுதியில் அறிவிக்கப்பட்ட பாஜ வேட்பாளரை மாற்றி விட்டு, நேற்று மாலையிலேயே டாக்டர் சரவணனை தலைமை அவசரம் அவசரமாக அறிவித்தது. 

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் புதூரில் உள்ள சட்டமன்ற தொகுதி அலுவலகத்தின் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர். 

மேலும் அரசியல் ஆதாயத்திற்காக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் சரவணனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.