சினிமா செய்திகள்

 


பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர் .இவர் நடிகர் ரிஷி கபூர் மற்றும் நீது கபூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் இவர் நடிகை ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இவர் அமிதாப் பச்சனுடன் இணைந்து பிரம்மஸ்திரா படத்தில் நடித்து முடித்துள்ளார்

______________________

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு இயக்குனர் செல்வராகவன் பதிலளித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை அருமையாக படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.  

இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என்று அணைத்து ரசிகர்களும் காத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்த அப்டேட்டை வெளியிட்டார்.

_________________________

இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் சென்னையில் அதிகம் வசூல் செய்த 5 படங்களின் பட்டியல்.

இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் சென்னையில் முதல் நாளாக அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் இதில் முதலிடத்தில் விஜயின் மாஸ்டர் படம் 1.21 கோடி வசூல் செய்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் நெஞ்சம் மறப்பதில்லை 34 லட்சம் வசூலிலும், மூன்றாவது இடத்தில் சக்ரா திரைப்படம் 31 லட்சமும் ஈஸ்வரன் திரைப்படம் 20 லட்சமும் பாரிஸ் ஜெயராஜ் படம் 15 லட்சமும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

_____________________

தென்னிந்திய நடிகராக கலக்கி வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள 4 படங்களை இரண்டு மாதங்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . 

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் ஹீரோ வேடங்களில் மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் தனது அசத்தலான நடிப்பில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்