தேர்தல் செய்திகள்

 


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சேலம் வாழப்பாடியில் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். ஏற்காடு தொகுதி வேட்பாளர் சித்ராவை ஆதரித்து மாலை 5 மணியளவில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

________________________________

எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி, வரும் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். மேலும், அன்று மற்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். 

____________________________

தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் கிடையாது. 

______________________________

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பல முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்பட்டாத நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

________________________________

அதிமுக சார்பில் கடந்த 05-ஆம் தேதி முதற்கட்டமாக 6 வேட்பாளர்களும் , நேற்று 2-ஆம் கட்டமாக 171 வேட்பாளர்களையும் இன்று மூன்றாம் கட்டமாக 2 வேட்பாளர்களையும் அதிமுக அறிவித்துள்ளது.

_____________________________

சீமான் மீது செங்கல்பட்டு நகர போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கி.சஞ்சீவி நாதனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் போலீசார் அவரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்காத நிலையில், சீமான் தொடர்ந்து பேச முயன்றுள்ளார்.  இதனையடுத்து, சீமான் மீது செங்கல்பட்டு நகர போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.