பாஜக 2ஜி ஊழலை கூறி தான் ஆட்சிக்கு வந்தது-பழ.கருப்பையா

 


பாஜக 2ஜி ஊழலை கூறி தான் ஆட்சிக்கு வந்தது. திமுக தான் பாஜக-வின் பீ டீம் என பழ.கருப்பையா விமர்சித்து உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தேர்வு குழுவில் உள்ள பழ.கருப்பையா ஆழ்வார்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு காமராசர் ஆட்சி வேண்டும் என ராகுல் கூறுகிறார். பின் எப்படி ஸ்டாலினை ஆதரிக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பாஜக 2ஜி ஊழலை கூறி தான் ஆட்சிக்கு வந்தது. திமுக தான் பாஜக-வின் பீ டீம் என விமர்சித்து உள்ளார். 

மேலும், உங்களுக்கு காமராஜர் வேண்டும் என்றால், 50 ஆண்டுகளாக ஊழலில் மிதந்த கட்சியோடு கூட்டு சேர்ந்து கொண்டு, காமராஜர் போல ஒரு முதலமைச்சர் வேண்டும் என சொல்வது முரணாக இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

எங்களின் நோக்கம் பாஜக-வை துடைத்தெறிவது. ஊழலை துடைத்தெறிவது என  கூறியுள்ளார்.